இலங்கையில் வேகா கார்களுக்கு அங்கீகாரம்
இலங்கையில் வேகா கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத்தகடு நேற்று வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் ´வேகா´ காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed